Sunday, January 29, 2012

மொக்கை நானூறு(/8)





1.    அரிசியில் புழுவென்றால் அருவெறுப்பு! அதுவே புத்தகத்தில் என்றால் ஆச்சரியம்! படிச்சா புழுவுக்கு கூட மதிப்பு தான் போல!
2.    நான் ரொம்ப நேரமா உளறுவதாக சொல்பவர்கள் யாவரும் ரொம்ப நேரம் இங்கு வேடிக்கை பார்க்கிறார்கள்! ;)
3.    என்னதான் பேரிலே கறுப்பு என பூ சத்தம் இருந்தாலும் கறுப்பு நிறத்தில் பூவே இல்லை! :( 
4.   பல் இல்லாத கொசு கடிப்பதாகவே பொய் குற்றச்சாட்டு சுமத்தினாலும் அது எந்த நீதிமன்றத்திலும் வழக்காடுவதில்லை
5.    வட்டமாக இருப்பதால் இறவாப் புகழடைந்த இரு வட்டங்கள் ஒன்று நிலா, இன்னொன்று தோசை! 
6.    காலையில் கழுத்தில் மாலை போட்டால் பாராட்டும் உலகம், மாலையில் கழுத்தில் காலை போட்டால் தூற்றும்! 
7.    கேள்விக்கு ஒரு குறி தான். (?) விடைகளுக்குத் தான் எத்தனை குறிகள்(?)!. 
8.    எத்தனை முறை அடிவாங்கினாலும் யாருமே கவலைப்படாத ஒரு பொருள் பெல்! 
9.    சதைப் பகுதியே இல்லாத அரிசியை ஏன் அட்சதைஎன்கிறார்கள்? 
10.  சமாதான அடையாளாமாக இருக்கும் புறா இருக்கும் பறவையினத்தில் தான் Angry birdsஉம் இருக்கு 
11.  லேட் நைட்லேட்டாவதே பகல் என்று அழைக்கப்படுகிறது! 
12. அவுட்கோயிங் காலைகட் செய்தால்அவுட்கேயிங் கல்ஆகிவிடும்
13. கோர்ட்டுல இருக்குற படி எல்லாம் மரசட்டத்தில் தான் செஞ்சுஇருப்பாங்களோ? #சட்டப்படி
14.  வாணி வைச்சிருந்த பன் தான்வாணிபன்னோ? 
15.  கட்டமா இருந்தா பிரட்! வட்டமா இருந்தா பன்! இதை உணர்பவனே மனிதன்!
16.  என்னதான் தோத்த டீமில் இருந்தாலும் யாரும் அஷ்வின்னை அஷ்லாஸ்னு கூப்பிட மாட்டாங்க 
17.  என்னதான் கொசுவுக்கு ஆறு கால்கள் இருந்தாலும் ஒரு காலில் கூட சலங்கை கட்டிகொண்டு பரதநாட்டியம் ஆடவே முடியாது! 
18. கொசு வால தூக்குல தொங்கி தற்கொலை பண்ணிக்கவே முடியாது
19.  என்ன தான்செல்போன் என சொன்னாலும் இன்கமிங் வந்தே தீரும்!
20.  கீரிப்பிள்ளையோட பிள்ளைய எப்படி சொல்றது? 
21.  புலி மனுசனை அடிச்சா படம் செஞ்சு மாட்டுவாங்க, மனுசன் புலியை அடிச்சா பாடம் செஞ்சு மாட்டுவாங்க!
22.  சிட்டிசன் என்றால் சிட்டியில் பிறந்த மகன் கொள்ளலாமா? 
23.  தண்ணீர் ஊற்றாமல் வளரும் மரம் பவுண்டிரி 
24.  யார் பவுலிங் போட்டு புகைபடங்களில் Zoom அவுட்டாகுது?
25.  உலகில் வெயிட்டான நகரம் என்றால் அது லண்டன்தான்!
26.  கதவில் கீழே இருக்கும் பாதுகாப்புக்கு தாழ்ப்பாள்னு சொன்னா மேல இருக்கும் பாதுகாப்புக்கு மேல்பாள் தானே சொல்லனும்? 
27.  ஆஸ்திரிலிய ஓப்பன் விளையாடும் மைதானத்துக்கு கூட பூட்டு போட கதவுகள் உண்டு 
28.  சோவைப் பார்த்து நீயா எனக் கேட்டால் சோனியாவும் திரும்பி பார்ப்பார்!
29.  முள்ளே இல்லாமல் டைம் பார்க்கனும்னா Digital கடிகாரத்திலும், Times of India பேப்பரிலும் பாக்கலாம்! 
30.  கோர்ட்டுல paragraph அளவுல தீர்ப்பு சொன்னாலும் court sentencesனு தான் எழுதுவாங்க!
31. மீட்டர் ஏற ஏற விலை அதிகமாகும் இரு விஷயங்கள் ஆட்டோ கட்டணமும், துணியும்
32.  தனுஷுக்கு 3 படத்துல சோலோ சாங் வைச்சாலும் அவர் ஷ்ருதியோடதான் பாடினாருனு தான் சொல்லுவாங்க!
33. கண்ணுக்கு முன்னாடி போட்டா கண்ணாடினு சொல்ராங்க! காருக்கு முன்னாடி போட்டா காராடி தானே சொல்லனும்
34.  யானை என்னதான் காலால் நடந்து சண்டை போட்டாலும் யானைப் படைனு தான் சொல்லுவாங்க காலாட்படைனு சொல்லமாட்டாங்க 
35.  கழித்தல் குறிக்கும் பெருக்கல் குறிக்கும் நடுவில் கட்டம் இருப்பது windows title barஇல் மட்டுமே 
36.  சேரனை பார்த்துசே ரன்னு சொன்னா ஓடிடுவாரா?
37.  பிளாஸ்டிக் மட்டும் மேல தெரிஞ்சாலும் ஏன் Iron boxனு சொல்ராங்க?
38.  கத்தினா சதக்! சேறுனா பொதக்! 
39.  பறந்து பறந்து அடிச்சா அது ரஜினி! அடிச்சு அடிச்சு மறந்தா அது கஜினி!
40.  வாழ்க்கைக்கும் மொக்கைக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இரண்டுக்கும் ஒரு கைதான்! 
41.  பசங்க கூட வைச்சுப்பது சகவாசம் என்றால் பொண்ணுங்க கூட வைச்சுக்குறது சகிவாசம் தானே? 
42.  துக்க செய்திகளுக்கு இரங்கல் தெரிவிக்கிராங்க! மகிழ்ச்சி செய்திகளுக்கு ஏன் ஏற்றல் தெரிவிக்க மாட்டேங்குராங்க?
43.  ஒரு ஆண்டி உடம்பு முழுக்க விபூதி பூசிட்டு வந்தா அவர் பூச்சாண்டி தானே?
44.  ஒரு செப்பு கம்பி கிட்ட போய் டிக்கெட் கேட்டேன் தரவே மாட்டேங்குது! அதுவும் கண்டக்டர் தானே? :( 
45.  Grammar தெரியாத பசங்க Tennis playedனு சொல்ராங்க! Ten are இல்ல Ten were played தானே சொல்லனும்?
46.  தரையில இருக்கிற இடத்துக்கு எதுக்கு "fin"landனு பேர் வைச்சாங்க?  
47.  இங்க்லாந்துனு சொல்ராங்க ஆனா அது இங்கவா இருக்கு? அங்க இல்ல இருக்கு?
48.  டென்னிஸ்னு சொல்ராங்க ஆனா ரெண்டு பேர் தான் ஏன் விளையாடுராங்க?
49.  பேட் கையில வைச்சு விளையாடினா பேட்டிங்னு சொல்றாங்க ஸ்டம்பை கையில் வச்சு விளையாடினா ஸ்டெம்பிங்னு சொல்லுவாங்களா?
50.   கருப்பா இருக்குற எருமையோட பால் எப்படி வெள்ளையா வருது?

    1 comment:

    1. உங்களுக்கு கடியைவிட லாகவமான இலக்கிய,கவித்துவமான சிந்தனைகள்தான் அதிகம் வருகிறது என்பது என் எளிய கருத்து..தவறிருப்பின் மன்னியுங்கள்..

      ReplyDelete

    வாங்க பழகலாம்